கீழ் South Island இல் ஞாயிற்றுக்கிழமை பலத்த காற்று வீசும் என MetService எச்சரிக்கை விடுத்துள்ளது.

Clutha, Southland மற்றும் Stewart Island இற்கு ஆரஞ்சு நிற பலத்த காற்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது, வடமேற்கு பகுதிகளில் ஞாயிறு மாலை 4 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை மணிக்கு 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி முதல் 12 மணி நேரத்திற்கு Fiordland ஆரஞ்சு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மணிக்கு 20 முதல் 30 மிமீ வரை அதிகபட்சமாக 110மிமீ மழை பெய்யக்கூடும் என MetService தெரிவித்துள்ளது.

Clutha, Fiordland, south of Charles Sound, Canterbury, North Island, Wairarapa, north of Masterton, மற்றும் Tararua மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்