West Coast பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை தொடர்பில் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆபரேஷன் பார்பர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நான்கு தேடுதல் வாரண்டுகளை முன்னெடுத்ததை அடுத்து 9000 டொலர்கள் ரொக்கம், கஞ்சா மற்றும் திருடப்பட்ட பொருட்களுடன், சுமார் 5000 டொலர்கள் தெரு மதிப்பு கொண்ட பொதி செய்யப்பட்ட MDMA போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் 21 மற்றும் 22 வயதுடைய இரண்டு ஆண்கள், Hokitika மற்றும் Dobson இல் கைது செய்யப்பட்டனர். மற்றும் 11 மார்ச் அன்று Greymouth மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருட்களை விநியோகிப்பதன் மூலம் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் நபர்கள் மற்றும் குற்றவியல் குழுக்கள் ஆகிய இரண்டையும் விசாரிக்க காவல்துறை உறுதிபூண்டுள்ளது என்று டிடெக்டிவ் சார்ஜென்ட் இயன் மெக்கின்னன் கூறினார்.

கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் விநியோகம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவத்துறையை தொடர்பு கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்