Far North இல் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை 4 மணிக்கு முன்னதாக, Kaitāia விற்கு வடக்கே Waiharara அருகே இடம்பெற்ற இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் இந்த விபத்தில்  ஒருவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மாநில நெடுஞ்சாலை 1 மற்றும் Rangaunu துறைமுகத்தை இணைக்கும் Kaimaumau சாலை தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியை தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளை வலியுறுத்துவதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்