Timaru வில் இருந்து வெலிங்டன் செல்லும் ஏர் நியூசிலாந்து விமானம் மீண்டும் பறவைகள் இடையூறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

NZ8190 விமானம் ஓடுபாதையில் பறவைகள் காரணமாக இன்று காலை இரத்து செய்யப்பட்டது.

முன்னெச்சரிக்கையாக விமானத்தை சரிபார்க்க பயணிகள் விமானத்திலிருந்து இறங்கியதாகவும் ஏர் நியூசிலாந்து தெரிவித்துள்ளது.

அது சரி செய்யப்பட்டு, விரைவில் விமானம் புறப்பட்டது.

அதே விமானம் நேற்றைய தினம் பறவைகள் இடையூறு காரணமாக இரத்து செய்யப்பட்டது.

இதன் விளைவாக Timaru வில் வெலிங்டனுக்கு திரும்பும் விமானமும் மற்றொரு விமானமும் இரத்து செய்யப்பட்டது, மேலும் விமான நிலையம் மூடப்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் போக்குவரத்து விபத்து விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தி நிருபர் - புகழ்