இன்று மாலை 5 மணி முதல் புதன்கிழமை காலை வரை Fiordland இல் கனமழை பெய்யும் என MetService எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ‌Fiordland இல் 250 மி.மீ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை George Sound இற்கும் Doubtful Sound இற்கும் இடையே 300 முதல் 350 மிமீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், திங்கள் மாலை 5 மணி முதல் செவ்வாய்கிழமை காலை 6 மணி வரை Fiordland மற்றும் Southland இல் பலத்த காற்று வீசக்கூடும் என்று MetService தெரிவித்துள்ளது.

Stewart Island இல் பலத்த காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்