Invercargill மேயர் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார்.

மேயர் நோபி கிளார்க் இரண்டு வாரங்களுக்கு முன்பு சிறிய மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து டன்னீடின் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அவருக்கு இரட்டை பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஒரு அறிக்கையில், கிளார்க் வீட்டில் இருப்பதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.

மேலும் சவுத்லேண்ட் மற்றும் டன்னீடின் மருத்துவமனைகளில் தன்னைக் கவனித்துக்கொண்ட ஊழியர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

மேயர் பணிக்கு திரும்பும் வரை துணை மேயர் டாம் காம்ப்பெல் சபையில் ஆட்சியைப் பொறுப்பேற்பார்.

கிளார்க் குணமடைய இரண்டு மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி நிருபர் - புகழ்