South Island இன் சில பகுதிகளுக்கு கடும் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி Westland மற்றும் Fiordland வடக்கே புதன் இரவு 9 மணி முதல் 24 மணி நேரத்திற்கு MetService ஆரஞ்சு கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த பகுதிகளில் 200 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வியாழன் மதியம் முதல் Fiordland இல் கனமழை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மழைப்பொழிவு காரணமாக ஆறுகள் மற்றும் நீரோடைகள் விரைவாக உயரக்கூடும் என்று MetService கூறியது.

Fiordland மற்றும் Southland இன் சில பகுதிகளில் புதன்கிழமை பிற்பகல் 3 மணி முதல் வியாழன் அதிகாலை வரை பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி நிருபர் - புகழ்