Horowhenua மாவட்டதில் உள்ள மிகப்பெரிய நகரமான Levin இல் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட ஒரு கட்டிடம் இன்று அதிகாலை தீக்கிரை ஆகியுள்ளது.

Bath தெருவில் அமைந்துள்ள குறித்த கட்டிடம்‌ அதிகாலையில் தீப்பிடித்ததை அடுத்து தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் அதிகாலை 3.50 மணியளவில் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.

தீப்பிடித்த இந்த கட்டிடம், முன்பு டிமென்ஷியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களை ஆதரிக்கும் Bupa Gardenview Care Home என கூறப்படுகிறது.

இந்த கட்டிடம் நீண்டகாலமாக பூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்டிடம் தீயினால் முற்றிலும் அழிக்கப்பட்டதாக FENZ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த தீவிபத்து சந்தேகத்திற்குரியதாக கருதப்படுகிறது, எனவே தீயணைப்பு ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் அப்பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

மேலும் பொலிஸார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி நிருபர் - புகழ்