ஆக்லாந்தில் திருடப்பட்ட காரில் அதி வேகமாக பயணித்து நெடுஞ்சாலையில் மற்றொரு வாகனத்தை மோதிவிட்டு பின்னர் காரை கைவிட்டு சென்ற இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 5.40 மணியளவில், Newmarket இல் உள்ள Mortimer Pass இல் ஒரு திருடப்பட்ட வாகனம் அதிவேகமாகச் சென்றது குறித்து பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஆக்லாண்ட் சிட்டி சென்ட்ரல் ஏரியா கமாண்டர், இன்ஸ்பெக்டர் கிரான்ட் டெட்ஸ்லாஃப் கூறுகையில்...

வாகனத்தை பொலிஸார் நிறுத்த முயன்றனர், ஆனால் நிறுத்த முடியவில்லை.

பொலிஸ் ஈகிள் ஹெலிகாப்டர், குறித்த கார் Lincoln சாலையில் உள்ள Northwestern Motorway இல் நுழைந்து மேற்கு நோக்கி பயணித்தபோது மற்றொரு காரில் மோதியதைக் கண்காணித்தது.

பின்னர் வாகனம் Whenuapai என்ற இடத்தில் உள்ள Rata சாலையில் கைவிடப்பட்டது, அங்கு இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படாதது நம்பமுடியாத அதிர்ஷ்டம் என்று இன்ஸ்பெக்டர் டெட்ஸ்லாஃப் கூறினார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 19 வயது இளைஞன் இன்று ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும் 14 வயது இளைஞன் இளைஞர் உதவி சேவைக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்