நியூசிலாந்து மெளரி பழங்குடி பெண் எம்.பி, பாரம்பரிய வெற்றி முழக்கத்தை நாடாளுமன்றத்தில் முழங்கிய காணொளி உலகம் முழுவதும் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

ஹன்ட்லி பகுதியை சேர்ந்த மையி கிளார்க் நியூசிலாந்து நாட்டின் மெளரி பழங்குடி இனத்தை சேர்ந்தவர்.

170 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில் 21 வயது இளம் பெண் எம்.பியாக மையி கிளார்க் கடந்த அக்டோபர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்தில் மெளரி பழங்குடியினர் தங்களது போர், வெற்றி, ஒற்றுமை மற்றும் இன குழுவின் பெருமை ஆகியவற்றை தங்களது சொல்லால் பயன்படுத்தும் முறையை கொண்டுள்ளனர்.

அதன்படி, அந்த பழங்குடியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 21 வயது இளம் பெண் எம்.பியான மைபி கிளார்க் தனது வெற்றி முழக்கத்தை நாடாளுமன்றத்தில் பேசி அதிர வைத்துள்ளார். இந்த முழக்கத்தை கேட்ட சக எம்.பிக்கள் அதை மகிழ்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் கேட்டுக் கொண்டு இருந்தனர்.

மைபி கிளார்க் உணர்ச்சிவசமாக பேசிய அந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் பெரிய அளவில் பகிரப்பட்டு வருகின்றது.