நியூசிலாந்து விமான சேவையான ஏர் நியூசிலாந்து 2024 ஆம் ஆண்டிற்கான உலகின் பாதுகாப்பான விமான நிறுவனமாக பெயரிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவை தளமாக கொண்ட பயணத் தகவல் இணையதளமான ஏர்லைன் ரேட்டிங்ஸ் மூலம் ஏர் நியூசிலாந்து விமான நிறுவனத்திற்கு இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

ஏர் நியூசிலாந்தானது பாதுகாப்பு மற்றும் அதன் வாடிக்கையாளர்களின் மீது உறுதியான கவனம் செலுத்தியது என குறித்த இணையதளத்தின் தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி தாமஸ் கூறினார்.

ஏர் நியூசிலாந்தின் தலைமை செயல்பாட்டு ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு அதிகாரி கேப்டன் டேவிட் மோர்கன் கூறுகையில்...

விமான நிறுவனம், பாதுகாப்பிற்கான அதன் உறுதிப்பாட்டை அங்கீகரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.

ஏர் நியூசிலாந்தில் நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் பாதுகாப்பு முன்னணியில் உள்ளது, மேலும் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் எங்கள் மக்களின் பாதுகாப்பு எப்போதும் எங்கள் மிகப்பெரிய முன்னுரிமையாகும் என அவர் தெரிவித்தார்.

ஏர்லைன் ரேட்டிங்ஸ் முன்பு ஏர் நியூசிலாந்தை 2023 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த விமான நிறுவனமாக அறிவித்தது. இது 2013 ஆம் ஆண்டிலிருந்து ஏழாவது முறையாகும்.

2024க்கான முதல் 10 பாதுகாப்பான விமான நிறுவனங்களின் பட்டியல் பின்வருமாறு:

Air New Zealand
Qantas
Virgin Australia
Etihad Airways
Qatar Airways
Emirates
All Nippon Airways
Finnair
Cathay Pacific Airways
Alaska Airlines

செய்தி நிருபர் - புகழ்