Taranaki நகரமான Hāwera இல் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை 10.30 மணிக்கு முன்னதாக, Hāwera வில் உள்ள Union தெரு மற்றும் Nelson தெரு சந்திப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து High Street, Grey Street மற்றும் Wellington Street உட்பட Union தெருவைச் சந்திக்கும் பல தெருக்கள் சுற்றிவளைக்கப்பட்டன.

மேலும் பொதுமக்கள் அந்த பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் காலை 11 மணிக்குப் பிறகு சுற்றிவளைப்பு நீக்கப்பட்டதாகவும், பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்