ஆக்லாந்தின் புறநகர்ப் பகுதியான Grey Lynn இல் உள்ள ஒரு வீட்டில் தீப்பிடித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மதியம் 1.30 மணியளவில் Great North சாலையில் இந்த தீ விபத்து இடம்பெற்றதாக தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் கூறியது.

மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

தீ விபத்து சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் புலனாய்வாளர் ஒருவர் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்