MetService இன்று North Island இன் பெரும் பகுதிகளுக்கு கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Northland, Auckland, Coromandel, Waikato, Bay of Plenty மற்றும் Hawkes Bay ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என MetService தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை இரவு 9 மணி வரை மழை கண்காணிப்பு நீடிக்கும் என‌ MetService கூறியது.

Rotorua, Taupo, Gisborne மற்றும் Taihape ஆகிய இடங்களும் கனமழையால் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் எனவும் மேலும் வாகனம் ஓட்டுதல் அபாயகரமானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி நிருபர் - புகழ்