South Island இன் சில பகுதிகளுக்கு MetService‌ வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் Canterbury முழுவதும் மற்றும் Dunedin இல் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Christchurch, Canterbury Plains மற்றும் Canterbury High Country ஆகிய பகுதிகளில் இன்று இரவு 7 மணி வரை கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும்.

Woodbury, Geraldine, Orari மற்றும் Arundel அருகில் உள்ள Ashburton மற்றும் Timaru முழுவதும் ஆலங்கட்டி மழை மற்றும் கடுமையான இடியுடன் கூடிய மழை பதிவாகியுள்ளது.

மோசமான வானிலை Canterbury மற்றும் Christchurch நகரங்களை மதியம் முழுவதும் பாதிக்கும் மற்றும் மாலை வேளையில் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த சீரற்ற வானிலையில் வாகனம் ஓட்டுதல் அபாயகரமானதாக இருக்கும் என வாகன சாரதிகள் எச்சரிக்கப்படுகின்றனர்.

செய்தி நிருபர் - புகழ்