நியூசிலாந்து 2023 பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அடுத்த அரசாங்கத்தை அமைக்க உள்ள தேசியக் கட்சி, இந்திய எம்.பி.க்கள் எவரையும் இம்முறை நாடாளுமன்றத்திற்கு அனுப்பவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

தேசிய கட்சி முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஐந்து வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிடத் தேர்ந்தெடுத்தது.

Manurewa வில் Siva Kilari, Auckland Central இல் Mahesh Muralidhar, Panmure-Ōtāhuh வில் Singh Randhawa, வெலிங்டனில் உள்ள Rongotai இல் ‌Karuna Muthu மற்றும் Palmerston North பகுதியில் Ankit Bansal ஆகியோர் தேசிய கட்சி சார்பில் இம்முறை தேர்தலில் போட்டியிட்டனர்.

இவர்கள் யாரும் தேர்தலில் வெற்றிபெறாத நிலையில், வரவிருக்கும் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், "எங்கள் பாராளுமன்றத்தில் சரியான நேரத்தில் இந்திய பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

செய்தி நிருபர் - புகழ்