லோலா சூறாவளி காரணமாக‌ மின் தடை ஏற்பட்டுள்ளதை அடுத்து Northland முழுவதும் உள்ள வீடுகளுக்கு மின்சாரத்தை மீட்டெடுக்க குழுக்கள் பணியாற்றி வருகின்றன.

இதனிடையே Northland, Coromandel Peninsula, Gisborne Tai Rāwhiti மற்றும் ஆக்லாந்தின் சில பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Matata க்கு மேற்கே உள்ள Bay of Plenty மற்றும் மாநில நெடுஞ்சாலை 5 க்கு தெற்கே உள்ள Hawkes Bay இன் உள்நாட்டு எல்லைகளுக்கு ஆரஞ்சு கனமழை எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏர் நியூசிலாந்து சீரற்ற வானிலை காரணமாக இதுவரை ஆறு உள்நாட்டு விமானங்களை ரத்து செய்துள்ளது.

லோலா சூறாவளி காரணமாக நேற்றிரவு ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதையடுத்து Northland மற்றும் Far North பகுதிகளில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்கு தற்போது மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

இப்போது Far North இல் 71 வீடுகளும், Northland இல் 32 வீடுகளும் மின்சாரம் இன்றி‌ காணப்படுகின்றன.

Paihia மற்றும் Russell இடையேயான பயணிகள் படகுகள் பெரிய அலைகள் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

Kāeo நதி மாநில நெடுஞ்சாலை 10 க்கு வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியதால் Kāeo இல் உள்ள வணிக நிலையங்கள் இன்று காலை மூடப்பட்டன.

செய்தி நிருபர் - புகழ்