லோலா சூறாவளியின் தாக்கம் நாளை முதல் Northland இல் உணரப்படும் கூறப்பட்டுள்ளது.

Northland, ஆக்லாந்து மற்றும் Coromandel Peninsula வில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடுமையான வானிலை எச்சரிக்கையை MetService வெளியிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நண்பகல் முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு திசையில் இருந்து மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்லாந்து மற்றும் Great Barrier Island இல் திங்கட்கிழமை காலை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என MetService தெரிவித்துள்ளது.

வானிலை புதுப்பிப்புகளை MetService இணையதளத்தில் காணலாம்.

செய்தி நிருபர் - புகழ்