ஆக்லாந்து‌ புறநகர்ப் பகுதியான New Windsor இல் உள்ள Dairy Shop இல், இருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 24 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறுகிறது.

ஒரு அறிக்கையில், டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் க்ளென் பால்ட்வின், New Windsor சாலையில் உள்ள ஒரு Dairy Shop இல் காலை 10.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்தார்.

இந்நிலையில் ஒரு ஆணும் பெண்ணும் கடுமையாக தாக்கப்பட்டதை அடுத்து கடையில் ஏராளமானோர் இருந்ததால் அவர்கள் தலையிட்டு குற்றவாளியை கட்டுப்படுத்தினர்.

பாதிக்கப்பட்ட இருவரும் ஆக்லாந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மேலும் ஆண் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், பெண் நிலையான நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

சம்பவ இடத்தில் பொலிஸார் இருப்பதாக பால்ட்வின் கூறினார்.

விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்