ஆக்லாந்தில் குதிரைகளை பட்டினி போட்டு, அவற்றின் மலத்தையே உண்ணும் அளவுக்கு கொடுமைப்படுத்திய நபருக்கு ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹார்னஸ் பந்தயத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள அந்த நபர், தனது Dairy Flat வீட்டில் 11 குதிரைகளை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

SPCA விலங்குகள் நல அமைப்பானது, ஏப்ரல் 2017 மற்றும் ஜூலை 2018 க்கு இடைப்பட்ட 15 மாத காலப்பகுதியில் அவர் குதிரைகளை கொடுமை செய்ததாகவும், போதுமான உணவு, உடற்பயிற்சி, தூரிகை மற்றும் பல் பராமரிப்பு ஆகியவற்றை வழங்கத் தவறியதாகவும் கூறியுள்ளது.

அவர் தனது குதிரைகளை மண்வெட்டி உட்பட பல்வேறு பொருட்களால் தாக்கினார்.

இந்தக் காலக்கட்டத்தில் ஆய்வாளர்கள் அங்கு பலமுறை சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது தொழுவத்தில் இருந்த குதிரைகள் தங்கள் சொந்த மலம் மற்றும் மரத்தூள்களை தொடர்ந்து சாப்பிடுவதைக் காண முடிந்தது என SPCA தெரிவித்தது.

ஒரு முறை சென்றபோது, ​​ஒரு குதிரை வேலியில் இருந்த மரத்தை தின்று அழுக்கை மெல்லுவதைக் காண முடிந்தது என்று அந்த அமைப்பு கூறியது.

இந்நிலையில் குதிரைகளை சித்ரவதை செய்த அந்த நபருக்கு 160 மணிநேர சமூகப் பணிக்கான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மற்றும் குதிரைகளை வைத்திருக்கு ஏழு ஆண்டுகளுக்கு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

செய்தி நிருபர் - புகழ்