காணாமல் போன Christchurch ரியல் எஸ்டேட் முகவரை தேடும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

யான்ஃபீ பாவோ என்ற குறித்த பெண் ரியல் எஸ்டேட் முகவரை மீண்டும் நகரின் தெற்கே உள்ள Greenpark இல் பொலிஸார் தேடி வருகின்றனர்.

ஜூலை 19 அன்று Hornby புறநகர்ப் பகுதியில் இருந்து காணாமல் போன பாவோவை கடத்தி கொலை செய்ததாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவரை தேடும் பணிகள் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று, தீயணைப்பு மற்றும் அவசர நியூசிலாந்து ஊழியர்கள் தேடுதலில் பங்கேற்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Greenpark இல் உள்ள Davidsons சாலையில் ஒரு பண்ணையில் காவல்துறையினர் தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி நிருபர் - புகழ்