பச்சிளம் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சைக்கு‌ கொவிட் தடுப்பூசி பெற்றவர்களிடமிருந்து இரத்தத்தை பெறுவதற்கு குழந்தையின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் ஆக்லாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் இரத்த நிபுணர்களின் கருத்துப்படி கொவிட் தடுப்பூசி செலுத்தியவர்களின் இரத்தத்தை குழந்தைக்கு வழங்குவதால் எவ்வித சிக்கலும் இல்லை எனவும் குறித்த குழந்தையை நீதிமன்றத்தின் பாதுகாப்பில் எடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என ஆக்லாந்து உயர் நீதிமன்றத்தில் Health New Zealand வழக்கு தொடர்ந்தது.

இதனை அடுத்து உடனடியாக குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய ஆக்லாந்து நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எதிர்த்துப் போராடினர்.

ஆனால் பல்வேறு தடைகளை தாண்டி Health New Zealand இன் தலையீட்டில் குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் வெளி வழக்கறிஞர்களின் கட்டணமாக Health New Zealand 26,000 டொலர்கள் செலவழித்துள்ளது.

மேலும் வெளியில் இருந்து சட்ட ஆலோசனைகளைக் கொண்டுவருவதற்கான செலவுகளைத் தவிர, அதன் உள் சட்டக் குழு இந்த வழக்கில் எவ்வளவு செலவழித்தது என்பதை அளவிட முடியாது என்று Health New Zealand கூறியது.

வழக்கு நடந்த நேரத்தில் மருத்துவமனை பாதுகாப்பை பலப்படுத்தியது மற்றும் சில நாட்களுக்குப் பிறகு குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும், அனைத்து பாதுகாப்பு காவலர்களும் ஏற்கனவே மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டதால் கூடுதல் செலவுகள் எதுவும் ஏற்படவில்லை என்று அது கூறியது.

பெற்றோர்கள் அன்பானவர்களாகவும், தங்கள் குழந்தைக்கு சிறந்ததையே விரும்புவதாகவும் இருக்கலாம் ஆனால் குழந்தை மற்றும் அவரது ஆரோக்கியம் தொடர்பில் முடிவெடுப்பது தான் முன்னுரிமை என்று நீதிபதி கூறினார்.

இந்நிலையில் அனைத்து மருத்துவ முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை மருத்துவமனை மருத்துவர்களுக்கு நீதிபதி வழங்கினார், ஆனால் மற்ற எல்லா கவனிப்பையும் பெற்றோரின் கைகளில் விட்டுவிட்டார் என Health New Zealand  தெரிவித்துள்ளது.