Dunedin இல் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்ததை அடுத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Moray Place என்ற இடத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கு அதிகாலை 3 மணிக்குப் பின்னர் பொலிஸார் வருகை தந்தனர்‌.

பாதிக்கப்பட்ட நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Moray Place இல் காட்சிப் பரிசோதனை நடந்து வருவதாகவும், மேலும் Dunedin இல் உள்ள மற்ற இடங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை கூறுகிறது.