ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் சூறாவளி தாக்கியதை அடுத்து கிழக்கு ஆக்லாந்தில் பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன.

இந்நிலையில் தற்போது அப்பகுதி மக்கள் கூரைகள் மற்றும் வீட்டு வேலிகளை சரிசெய்து வருகின்றனர்.

பெரும்பாலான சேதங்கள் Pakuranga Golf Club தென்கிழக்கில் இருந்து Flat Bush இல் உள்ள Barry Curtis Park வரை ஏற்பட்டுள்ளன.

சுமார் 50 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 10 வீடுகளுக்கு மஞ்சள் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதனிடையே திங்கள்கிழமை பிற்பகல் Nelson அருகே Tasman மாவட்டத்தில் சூறாவளி வீசியதில் மேலும் 50 சொத்துக்கள் சேதமடைந்தன.

மற்றொரு சூறாவளி இன்று காலை Kāpiti கடற்கரையைத் தாக்கியது, பல சொத்துக்களை சேதப்படுத்தியது. ஒரு வாலிபர் அவர் தூங்கிக்கொண்டிருந்த கட்டிடம் சூறாவளியால் பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் ஆக்லாந்தில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வடக்கு தீவு முழுவதும் கனமழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.