இன்று நியூசிலாந்தில் 17,148 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 34 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்தில் இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 2,899 பேரும், நோர்த்லேண்டில் 730 பேரும், வைகாடோவில் 1566 பேரும், Bay of Plenty இல் 967 பேரும், Lakes இல் 479 பேரும், Hawke's Bay இல் 1015 பேரும், Mid Central இல் 910 பேரும், Whanganui இல் 447 பேரும், தரணகியில் 706 பேரும், Tairawhiti இல் 250 பேரும், Wairarapa வில் 210 பேரும், Capital and Coast இல் 1035 பேரும், Hutt Valley வில் 617 பேரும், Nelson Marlborough வில் 690 பேரும், Canterbury இல் 2816 பேரும், South Canterbury இல் 318 பேரும், தெற்கில் 1404, West coast இல் 79 பேரும் மேலும் இடம் அறியப்படாத 10 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இந்நிலையில் நாட்டின் எல்லையில் இன்று 44 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம் 72 முதல் டோஸ்கள், 172 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 2156 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசியின் 106 முதல் டோஸ் மற்றும் 2929 இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டன.