Hamilton புறநகர்ப் பகுதியான Frankton இல் பெண் ஒருவர் சுத்தியலால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

தாக்கப்பட்ட பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு சுமார் 6 மணியளவில் Frankton இல் உள்ள Marire Ave இல் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதை அடுத்து பொலிஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.

அங்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டு தலையில் பலத்த காயங்களுடன் அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

குற்றவாளி அந்தப் பெண்ணுக்குத் தெரிந்தவர் எனவும், அவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்