சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை ’தி பவர் ஆப் தி டாக்’ திரைப்படத்திற்காக நியூசிலாந்தை சேர்ந்த ஜேன் கேம்பியன்’ வென்றார்.

ஆஸ்கார் விருதுகளின் 94 ஆண்டுகால வரலாற்றில் ஆஸ்கர் விருதை பெற்ற நியூசிலாந்தின் மூன்றாவது பெண்மணி இவர் ஆவார்.

67 வயதான கேம்பியன் நியூசிலாந்தில் சிறந்த இயக்குனருக்கான பெருமையைப் பெற்ற ஒரே பெண்மணி.