இன்று நியூசிலாந்தில் 12,882 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்தில் இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தொற்றுகளில் ஆக்லாந்தில் 2300 பேரும், நோர்த்லேண்டில் 445 பேரும், வைகாடோவில் 1215 பேரும், Bay of Plenty இல் 662 பேரும், Lakes இல் 360 பேரும், Hawke's Bay இல் 701 பேரும், Mid Central இல் 728 பேரும், Whanganui இல் 291 பேரும், தரணகியில் 544 பேரும், Tairawhiti இல் 179 பேரும், Wairarapa வில் 176 பேரும், Capital and Coast இல் 918 பேரும், Hutt Valley வில் 498 பேரும், Nelson Marlborough வில் 506 பேரும், Canterbury இல் 2119 பேரும், South Canterbury 235 பேரும், தெற்கில் 968, West coast இல் 32 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 21 பேர் உட்பட 861 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டின் எல்லையில் இன்று 52 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம் 31 முதல் டோஸ்கள், 87 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 1101 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசியின் 113 முதல் டோஸ் மற்றும் 2756 இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டன.