இன்று நியூசிலாந்தில் 10,239 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 04 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்தில் இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 258 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி ஆக்லாந்தில் ஒருவரும், வெலிங்டனில் ஒருவரும், ஒடாகோ சவுத்லேண்டில் இருவரும் இன்று உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய தொற்றுகளில் ஆக்லாந்தில் 1886 பேரும், நோர்த்லேண்டில் 382 பேரும், வைகாடோவில் 913 பேரும், Bay of Plenty இல் 617 பேரும், Lakes இல் 308 பேரும், Hawke's Bay இல் 541 பேரும், Mid Central இல் 493 பேரும், Whanganui இல் 223 பேரும், தரணகியில் 431 பேரும், Tairawhiti இல் 135 பேரும், Wairarapa வில் 105 பேரும், Capital and Coast இல் 692 பேரும், Hutt Valley வில் 349 பேரும், Nelson Marlborough வில் 405 பேரும், Canterbury இல் 1750 பேரும், South Canterbury 199 பேரும், தெற்கில் 772 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 28 பேர் உட்பட 848 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டின் எல்லையில் இன்று 33 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 596,402 ஆகும்.