North Island இல் இன்று இடம்பெற்ற வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மாலை 4 மணிக்கு முன்னதாக Palmerston North பகுதியில் ஒரு வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை வைகாடோவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மாநில நெடுஞ்சாலை 27ல் Matamata அருகே காலை 8 மணிக்கு முன்பு குறித்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இரு விபத்துகளுக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.