கேன்டர்பரி (Canterbury) பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள புறநகர்ப் பகுதிகளில் மதுபானச் சட்டத்தை மீறியதற்காக 6 பேரை கிறிஸ்ட்சர்ச் பொலிஸார் கைது செய்ததுடன் 40 பேருக்கு அபராதம் விதித்துள்ளனர்.

இந்த மாத இறுதி நாட்களில் Riccarton மற்றும் Ilam இல் மக்கள் கூடும் பெரிய கூட்டங்களை கலைக்க அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் மக்கள் கைது செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு, ஸ்டீரியோக்கள் பறிமுதல் செய்யப்பட்ட பிறகு, விருந்து உபசாரங்களுக்கு செல்வோர் பாதுகாப்பாக இருக்குமாறு கேன்டர்பரி காவல்துறை நினைவூட்டுகிறது.

இதனிடையே சுமார் 40 நபர்களுக்கு மதுவிலக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கூட்டங்கள் தொடர்பான குற்றங்களுக்காக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஒலி கட்டுப்பாட்டு அதிகாரிகள் 16 ஸ்டீரியோக்களை (ஒலி சாதனம்) கைப்பற்றியுள்ளனர்.

"கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள விருந்து உபசார இடங்கள் மற்றும் கேளிக்கை பகுதிகளை" சுற்றி காவல்துறையின் அதிக தெரிவுநிலை இருக்கும் என்று ஏரியா சமூக சேவை மேலாளர் மூத்த சார்ஜென்ட் ராய் அப்லி கூறினார்.

அந்த வளாகத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் சுற்றியுள்ள தெருக்களில் வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கேன்டர்பரி பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பாதுகாப்புக் குழுவுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மறுபுறம், பல்கலைக்கழக பகுதியில் விருந்து உபசாரங்களில் கலந்து கொண்டவர்களின் நடத்தை நன்றாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.