இன்று நியூசிலாந்தில் 15,871 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 13 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்தில் இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தொற்றுகளில் ஆக்லாந்தில் 2982 பேரும், நோர்த்லேண்டில் 558 பேரும், வைகாடோவில் 1432 பேரும், Bay of Plenty இல் 1024 பேரும், Lakes இல் 420 பேரும், Hawke's Bay இல் 873 பேரும், Mid Central இல் 814 பேரும், Whanganui இல் 330 பேரும், தரணகியில் 591 பேரும், Tairawhiti இல் 224 பேரும், Wairarapa வில் 251 பேரும், Capital and Coast இல் 1063 பேரும், Hutt Valley வில் 567 பேரும், Nelson Marlborough வில் 519 பேரும், South Canterbury இல் 251 பேரும், தெற்கில் 1245 பேரும், West coast இல் 59 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 27 பேர் உட்பட 899 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டின் எல்லையில் இன்று 29 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 571,954 ஆகும்.