கடந்த மார்ச் 12ஆம் திகதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பெண்களின் கலந்துரையாடல் நடைபெற்றது.

குறித்த சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் ஷீலா ரமணன் இக்கலந்துரையாடலை நடத்த, கலை அசோகன், ஐஸ்வர்யா சந்திரசேகர், பூர்ணிமா வினோத், ரம்யா சுரேஷ், பூரணி ஸ்ரீராம், திவ்யா கார்த்திக் பாபு ஆகிய ஆறு பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மிகச் சிறப்பானதொரு கருத்தரங்கமாக, தங்கள் கருத்துக்களை எவ்வித தடங்கலும் இன்றி விழிப்புணர்வுடன் பேசியது மிகவும் பாராட்டுதலுக்கு உரியதாக இருந்தது.

கிட்டத்தட்ட 112 வருடங்களுக்கு முன்னாள் பல பெண்களின் போராட்டங்களுக்குப் பின்னால் பெண்களுக்கான ஓர் தினம் உருவாகி இன்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து பல நல்ல செயல்பாடுகளுடன் மதிப்புமிக்க ஓர் நாளாக உருவாகியுள்ளது.

பாரதி போன்றோர் விரும்பியது போல 'நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும்' என்றும் நிலைத்திட வாழ்ந்திடுவோம் பெண்களை.

செய்திகள் : செய்தியாளர் ஷீலா ரமணன்