கிஸ்போர்ன் (Gisborne) பகுதியில் இன்று இரவு அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது,‌

டோலாகா வளைகுடா (Tolaga Bay)  மற்றும் டோகோமாரு வளைகுடா (Tokomaru Bay) பகுதிகளில் மக்கள் வெள்ளத்தில் சிக்கியதை அடுத்து, தைராவிட்டி (Tairāwhiti) சிவில் பாதுகாப்பு அவசர நிலையை பிரகடனப்படுத்தியது.

150 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், 750 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், ஹிகுவாய் நதியின் நீர் மட்டம் வேகமாக 12 மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகவும் அவசர முகாமைத்துவ அமைச்சரும் கிழக்கு கடற்கரை பாராளுமன்ற உறுப்பினருமான கிரிதாபு ஆலன் தெரிவித்தார்.

மாநில நெடுஞ்சாலை 35 கிஸ்போர்னில் இருந்து கிழக்கு கேப்பைச் சுற்றியுள்ள பொட்டாகா வரை வெள்ளம், சறுக்கல் காரணமாக மூடப்பட்டது.

எவ்வாறாயினும், தைராவிட்டி குடியிருப்பாளர்களுக்கு கிஸ்போர்ன் மற்றும் டோலாகா விரிகுடாவிற்கும் (Tolaga Bay) பொட்டாகா (Potaka) மற்றும் ருடோரியாவிலிருந்தும் (Ruatoria) பயணிக்க நான்கு மணிநேர அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வாகா கோட்டாஹி மாநில நெடுஞ்சாலை 35 இன் பெரும்பாலான பகுதிகளை மதியம் 2 மணிக்கு மீண்டும் திறந்தது.

ஆனால் அதிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் போது மாலை 6 மணிக்கு மீண்டும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வீட்டிற்குச் செல்ல அல்லது அத்தியாவசிய நோக்கங்களுக்காக பயணிப்பதை அனுமதிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகுதியிலும் நாளைய தினமும் கிஸ்போர்ன் பகுதியை கனமழை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கனமழையுடன் கூடிய சிவப்பு வானிலை எச்சரிக்கையை வெளியிட MetService அவர்களின் முன்னறிவிப்பை மேம்படுத்தியுள்ளது.

இதனிடையே இன்று பிற்பகல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான திட்டத்தை உருவாக்குமாறு தைராவிட்டி சிவில் பாதுகாப்பு எச்சரித்துள்ளது.