ஆக்லாந்தில் உள்ள Otara வில் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து இன்று மாலை 5.15 மணியளவில் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுடன் மிடில்மோர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Sandbrook அவென்யூ மற்றும் Preston சாலைக்கு இடையே உள்ள Bairds சாலை அடுத்த இரண்டு மணிநேரங்களுக்கு மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.