ஹாக்ஸ் பே (Hawke's bay) பிராந்திய கவுன்சிலின் தலைவரான ரெக்ஸ் கிரஹாம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளமை சமூகத்தையும் ஊழியர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சுகாதார காரணங்களை சுட்டிக்காட்டி ரெக்ஸ் கிரஹாம் இன்று தனது ராஜினாமாவை அறிவித்தார்.

தனக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோயானது சபை மற்றும் சமூகத்திற்கு முறையாக சேவை செய்வதற்குத் தேவையான ஆற்றலையும் அர்ப்பணிப்பையும் திரும்பக் கொடுக்காது என்று அவர் தேரிவித்துள்ளார்.

மேலும் நேப்பியர் துறைமுகத்தின் ஆரம்ப பொது வழங்கலுடன் அவர் ஈடுபட்டதில் பெருமைப்படுவதாக அவர் கூறினார்.

இந்நிலையில் கவுன்சில் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் பால்மர்,பிராந்தியத்தின் சார்பாக அயராது உழைத்தமைக்கு ரெக்ஸ் கிரஹாமிற்கு நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.