ஆக்லாந்து புறநகர்ப் பகுதியான வாட்டர்வியூவில் ஏற்பட்ட ஒரு கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்தனர்.

குறித்த கார் இன்று அதிகாலை 3 மணியளவில் அல்போர்ட் தெரு மற்றும் கிரேட் நார்த் சாலை சந்திக்கும் அருகே ஒரு போக்குவரத்து விளக்கு கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.மூன்றாவது நபருக்கு சிறிய காயங்களே ஏற்றபட்டுள்ள நிலையில் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.