ஐபிஎல் டி20 தொடரின் 14வது சீசனில் இன்று ஒரே நாளில்  பெங்களூர் - கொல்கத்தா, டெல்லி - பஞ்சாப் அணிகள் மோதும் 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. சென்னையில் இன்று மாலை நடைபெறும் 10வது லீக் ஆட்டத்தில் ஆர்சிபி - கேகேஆர் அணிகள் மோதுகின்றன. தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை அணியையும், அடுத்து ஐதராபாத் அணியையும் வீழ்த்திய உற்சாகத்துடன் ஹாட்ரிக் வெற்றிக்கு குறி வைக்கிறது பெங்களூர்.