ஜனவரி 28 அன்று Hastings இல் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Te Kauke இல் Colin White சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை 2 சந்திப்பில் அந்த நபர் விபத்துக்குள்ளானார்.

இந்நிலையில் குறித்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தங்கள் எண்ணங்கள் அவரது அன்புக்குரியவர்களுடன் இருப்பதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் நடந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்