கிழக்கு ஆக்லாந்து கடற்கரையில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நண்பகல் 12.30 மணியளவில் Cockle Bay பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.

அந்த நபரை மீட்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்ட போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என கூறப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்