Taranaki இல் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

Eltham இல் உள்ள மாநில நெடுஞ்சாலை 3 இல் Mountain வீதி மற்றும் Boylan சாலை சந்திப்பில் இன்று அதிகாலை 5.50 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து இந்த விபத்து தொடர்பில் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் இருந்த மூத்த சார்ஜென்ட் ஆண்ட்ரூ ரஸ்,  பலியானவர்களின் உடல்களை கார்களில் இருந்து வெளியே எடுப்பதில் பொலிஸார் தொடர்ந்து பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.

மாநில நெடுஞ்சாலை 3 மற்றும் வடக்கு நோக்கி செல்லும் போக்குவரத்திற்காக Dalziell சாலையிலும், தெற்கு நோக்கி செல்லும் போக்குவரத்திற்காக மாநில நெடுஞ்சாலை 3 மற்றும் Rotokare சாலையிலும் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காட்சி பரிசோதனை நடத்தப்படும் போது சாலை சிறிது நேரம் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

செய்தி நிருபர் - புகழ்