ஆக்லாந்து மற்றும் Te Kuiti இற்கு கடுமையான வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வெப்பம் 30C ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Whitianga, Tauranga மற்றும் Whakatāne உள்ளிட்ட மேல் North Island இன் பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான வானிலை காணப்படும் என்று வானிலை ஆய்வாளர் என்கைர் வோர்ஸ்பூன் கூறினார்.

Alexandra மற்றும் Taumarunui இல் நேற்றைய தினம் அதிகபட்சமாக 29C இல் இருந்து சனிக்கிழமை முறையே 18C மற்றும் 19C ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக MetService தெரிவித்துள்ளது.

செவ்வாயன்று, Tauranga விமான நிலையம் மிகவும் வெப்பமான இடமாக இருந்தது, அங்கு அதிகபட்ச வெப்பநிலை 30.4C ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி நிருபர் - புகழ்