Southland இல் உள்ள மாநில நெடுஞ்சாலை 6 இல் வாகனம் மோதுண்டு பாதசாரி ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

மதியம் 1.40 மணியளவில் Brandon மற்றும் Wemyss தெருக்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த பயங்கர விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் பலத்த காயமடைந்த பாதசாரி விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சாலை சிறிது நேரம் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்