ஹமில்டன் வணிக வளாகத்திற்கு வெளியே காணப்பட்ட வாகனம் ஒன்றில் இன்று சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பல பொலிஸார் விரைந்து வந்தனர்.

இதனிடையே சார்ட்வெல் ஷாப்பிங் சென்டரின் ஒரு பகுதி சுற்றி வளைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை சந்தேகத்திற்குரியதாக கருதவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்