எதிர்வரும் அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நியூசிலாந்து பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாடு முழுவதும் உள்ள வேப் ஸ்டோர்களின் எண்ணிக்கையை 600 ஆகக் கட்டுப்படுத்துவதாகவும் மற்றும் வேப் விற்பனை செய்ய உரிமம் பெறும் முறையை அறிமுகப்படுத்துவதாகவும் தொழிலாளர் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

இது இளைஞர்கள் மத்தியில் vap பயன்பாட்டை ஒடுக்குவதற்கான புதிய முயற்சியாகும்.

தொழிலாளர் கட்சி தலைவர் கிறிஸ் ஹிப்கின்ஸ், அரசாங்கம் இளைஞர்கள் மத்தியில் vap பயன்பாட்டை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது, அதாவது டிஸ்போசபிள் வகை வேப்ஸைத் தடை செய்தல் மற்றும் புதிய சில்லறை விற்பனையாளர்கள் பள்ளிகளுக்கு அருகில் vap கடைகளை திறப்பதைத் தடுப்பது போன்ற பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

vap கள் மிகவும் பரவலாகக் கிடைக்கின்றன, எனவே கடுமையான நடவடிக்கைகள் இப்போது தேவை என்று அவர் கூறினார்.

vap ஸ்டோர்களின் எண்ணிக்கையை 600 ஆகக் குறைப்பது பாதிக்கு மேல் vap பயன்பாட்டை குறைக்கும்.

மற்றும் Dairy Shop மற்றும் பெட்ரோல் நிலையங்கள் உட்பட அனைத்து சில்லறை விற்பனையாளர்களும் வேப்பிங் பொருட்களை விற்க உரிமம் பெற வேண்டும்.

உரிமம் வழங்கும் நடவடிக்கையானது vapes விற்கும் விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை குறைக்கும் மற்றும் பள்ளிகள் அல்லது குறைந்த சமூக-பொருளாதார சமூகங்களை குறிவைத்து vape store கள் இல்லை என்பதை உறுதிசெய்யும் என்று ஹிப்கின்ஸ் கூறினார்.

இதனிடையே சிறுவர்களுக்கு vapes சப்ளை செய்பவர்களுக்கு 5000 டொலர்கள் முதல் 10,000 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், அதே நேரத்தில் சில்லறை விற்பனையாளர்களுக்கான அபராதம் 10,000 டொலர்கள் முதல் 15000 டொலர்கள் வரை அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு புதிய சட்டம் தேவைப்படும் என்பதால், தொழிலாளர் கட்சி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்