தெற்கு ஆக்லாந்தின் Takanini இல் சனிக்கிழமை ரயில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்தை பொலிஸார் இன்று உறுதிப்படுத்தினர்.

ஒரு அறிக்கையில், சனிக்கிழமை மாலை 6 மணியளவில் Walters சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே அவரது மரணம் மரண விசாரணை அதிகாரிக்கு பரிந்துரைக்கப்பட்டது.

செய்தி நிருபர் - புகழ்