Palmerston North பகுதியில் ஒரு வீட்டில் கத்திக்குத்து காயங்களுடன் காணப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 4.15 மணியளவில் Roslyn இல் உள்ள ஒரு வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தங்களுக்கு புகார் அளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்‌.

இந்த தகவலுக்கமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அப்போது குறித்த வீட்டில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட நபர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்