Te Pāti Māori கட்சி எதிர்வரும் அக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள நியூசிலாந்து பொது தேர்தலில் போட்டியிடும் தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

வேட்பாளர்கள் தர வரிசையில் நியூசிலாந்தின் மிகவும் இளம் வேட்பாளரை Te Pāti Māori கட்சி அறிமுகப்படுத்தியுள்ளது ‌

20 வயதான ஹனா-ரவ்ஹிதி மைபி-கிளார்க் என்ற பெண் வேட்பாளர் இப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.

இவர் 50 ஆண்டுகளுக்கு முன்பு மவோரி மொழி மனுவைத் தலைமை தாங்கிய ஹனா தே ஹேமாராவின் வழித்தோன்றல் ஆவார்.

அடுத்த தேர்தலில் நியூசிலாந்தின் இளம் எம்.பி. ஆவதற்கான எல்லா வாய்ப்புகளும் ஹனாவுக்கு உண்டு என தே பதி மாவோரி கட்சி தெரிவித்துள்ளது.

இவர் தேர்தலில் வெற்றிபெற்றால் 170 ஆண்டுகளில் நியூசிலாந்தில் தெரிவு செய்யப்படும் இளைய எம்.பி என்ற பெருமையை இவர் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது‌.

அக்டோபர் 14 ஆம் திகதி நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அனைத்து முக்கிய கட்சிகளும் தற்போது அறிவித்துள்ளன.

செய்தி நிருபர் - புகழ்