நியூசிலாந்தில் எதிர்வரும் அக்டோபர் 14 ஆம் திகதி இடம்பெற உள்ள பொது தேர்தலில் தேசிய கட்சி மற்றும் ACT கட்சியால் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியும் என 1News Verian அரசியல் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி தேசிய கட்சி 35 சதவீத வாக்குகளையும், ஆக்ட்12 சதவீதமான வாக்குகளையும் பெரும் என அந்த கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் 120 ஆசனங்களில் தேசிய கட்சி 46 ஆசனங்களையும், ACT 15 ஆசனங்களையும் பெற்று 61 ஆசனங்களாக பெரும்பான்மையை உருவாக்க முடியும்.

இதற்கிடையில் தொழிற்கட்சி 33 சதவீதம் வாக்குகளை பெற வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பு கூறுகிறது.

ஜூன் மாதத்தில் வெளியான 1நியூஸ் வெரியன் கருத்துக்கணிப்பில் 35 சதவீதம் வாக்குகளை பெரும் என கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பசுமைக் கட்சி 10 சதவீத வாக்குகளை பெரும் என கூறப்படுகிறது.

Te Pāti Māor கட்சி 3 சதவீத வாக்குகளை பெரும் என கூறப்படுகிறது.

இதன்படி தொழிற்கட்சி 43 ஆசனங்களையும், பசுமைக் கட்சி 12 ஆசனங்களையும், Te Pāti Māor கட்சி 4 ஆசனங்களையும் பெற்று மொத்தம் 59 ஆசனங்களையும் உருவாக்க முடியும்.

கடந்த ஜூன் மாதம் 1நியூஸ் காந்தார் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் தேசிய கட்சி 37 சதவீதத்தைப் பெற்றிருந்தது, தொழிலாளர் கட்சி 35 சதவீதத்தில் இருந்தது மற்றும் ACT கட்சி 11 சதவீதமாக இருந்தது..

அதேவேளை பசுமைக் கட்சி கணிசமாக வீழ்ச்சியடைந்து வெறும் 7 சதவீதமாக இருந்தது மற்றும் Te Pāti Māor கட்சி 2 சதவீதமாக இருந்தது.

இதனிடையே கடந்த புதன்கிழமை நடைபெற்ற வரி செலுத்துவோர் சங்கம் - க்யூரியா கருத்துக்கணிப்பில் தொழிற்கட்சி 31 சதவீதமாக இருந்தது.

தேசிய கட்சி 33 சதவீதத்தை பெற்று அப்போதும் தொழிற்கட்சியை விட முன்னணியில் இருந்தது.

இதற்கிடையில், கடந்த திங்கட்கிழமை ஒரு டால்போட் மில்ஸ் கார்ப்பரேட் வாக்கெடுப்பில் தொழிற்கட்சி 31 சதவீதமாக இருந்தது,

தேசிய கட்சி ஒரு புள்ளி உயர்ந்து 36 சதவீதமாக இருந்தது.

பசுமைக் கட்சி 8 சதவீதமும், Te Pāti Māor கட்சி 4.2 சதவீதமும், NZ ஃபர்ஸ்ட் கட்சி 4 சதவீதமும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.