கிழக்கு ஆக்லாந்தின் Sunnyhills என்ற இடத்தில் கார்கள் அடித்து உடைக்கப்பட்ட புகாரின் பேரில் 12 மற்றும் 13 வயதுடைய ஆறு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் ஒரு குழு வாகனங்களை உடைப்பது குறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து ஈகிள் ஹெலிகாப்டர் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டது.

Counties Manukau கிழக்கு பகுதி தடுப்பு மேலாளர் இன்ஸ்பெக்டர் ரகானா குக் கூறுகையில், கார்களை உடைத்து சேதப்படுத்திய குழுவினர் இரண்டு வாகனங்களில் ஒன்றாகப் பயணிப்பதைக் காண முடிந்தது.

இந்த வாகனங்களில் ஒன்று Ōtara வில் நிறுத்தப்பட்டது, மேலும் ஐந்து சிறுவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இரண்டாவது வாகனம் Howick மற்றும் Whitford பகுதியில் பயணித்தபோது அதன் நகர்வுகளை ஹெலிகாப்டர் தொடர்ந்து கவனித்து வந்தது.

இதனையடுத்து Ellerslie-Panmure நெடுஞ்சாலையில் வாகனம் மடக்கி பிடிக்கப்பட்டதை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டார் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இவர்கள் ஆறு பேரும் இளைஞர் உதவிக்கு அனுப்பப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்